உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக SW Maps phone app பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்

2020ஆம் ஆண்டில் இந்த SW MAP APP கையடக்க தொலைபேசி செயலி உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் எல்லைகளை ஒதுக்குவதோடு அவற்றில் சம்பந்தப்பட்ட தரவுகளையும் தகவல்களையும் தானியங்கியாக முறைமையில் பதிவது இங்கு இடம்பெற்றது. இது தொடர்பான பயிற்சியின் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்கள் சிலவற்றில் இப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

உள்ளூராட்சி நிறுவனங்களின் சொத்துக்களை முகாமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக CAMS Software பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்

செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஆகக்கூடிய பயனுறுதியைக் கொண்ட சொத்துக்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல், சொத்துக்களை ஒழுங்காகப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் என்பவை உட்பட சேவைகளை முகாமைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு சொத்துக்களைப் பிரயோகிப்பதற்கு முறையான செயற்பாடு ஒன்றைப் பின்பற்றுவதற்காக இந்த மென் பொருளைப் பயன்படுத்துவது முக்கியமானதாகும். 2020ஆம் ஆண்டிலிருந்து இந்த மென் பொருள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

உள்ளூராட்சி திணைக்களத்தில் டிஜிட்டல் நடைமுறை செயற்படுதல்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பாரிய சமூக மாற்மொன்றை ஏற்படுத்தி நவீனமயப்படுத்தப்பட்ட கலாசாரமொன்று கட்டியெழுப்பப்படுகிறது. இதன்போது மக்களின் வசதிக்காக மக்களை மையப்படுத்திய டிஜிட்டல் இராஜதந்திரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம் அரச பொறிமுறையில் நிலவும் வினைத்திறனற்ற தன்மையையும் தாமதத்தையும் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு இணையத்தளத்தின் ஊடாக சேவைகளை வழங்குதல் மற்றும் அச் சேவைகள் பற்றி உரிய அறிவுறுத்தல்களையும் பயிற்சிகளையும் உள்ளூராட்சி திணைக்களம் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்குகிறது.

சகல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இணையத்தள (வெப்) பக்கமொன்று இருத்தல்

ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் இணையத்தள பக்கமொன்றின் ஊடாக தகவலறியும் சட்டத்தின் பிரகாரம் தகவல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதன்போது உள்ளூராட்சி நிறுவனங்கள் வருடாந்த திட்டங்களை முன்வைத்தல், பொதுமக்களுக்கு உரிய அனைத்து தகவல்களையும் வழங்குதல், இணையத்தளத்தின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கு பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பவை நிகழ்கின்றன.

மின் புர நெகும நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன் அலுவலக முறையை அறிமுகப்படுத்துதல்

உள்ளூராட்சி நிறுவன சேவை பெறுனர்களின் வசதிக்காக செயற்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையின் ஊடாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேவையான தினசரி அறிக்கைககள் கணினிமயப்படுத்தப்படுகின்றன. முறைப்பாடுகளை முகாமைப்படுத்துதல், விண்ணப்பங்களை முகாமைப்படுத்துதல், அனைத்து வருமானங்களுக்கும் பற்றுச் சீட்டுக்களை வழங்குதல், ஆதன வரி முகாமைத்துவம், நூலக முகாமைத்துவம் போன்றவை இந்த முறைகளில் செயற்படுத்தப்படுகின்றன.

மேலும் திட்டங்கள்

  • மாத்தறை நிர்மாண பொருட்கள் பரிசோதனைக்கூடத்தை ஆரம்பித்தல்
  • மொன்ரோவியாவத்த குப்பைக்கூழ முகாமைத்துவ அலகை ஆரம்பித்தல்
  • காலி நிர்மாண பொருட்கள் பரிசோதனைக்கூடத்தை ஆரம்பித்தல்
  • அரச நிறுவனங்களில் மாதிரி சேதனப் பசளை வீட்டுத் தோட்டங்களை அமைப்பதற்காக இலவசமாக சேதனப் பசளை வழங்குதல்
  • மின் புர நெகும Front Office Software உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக அறிமுகப்படுத்துதல்
  • தென் மாகாண திண்ம கழிவுப் பொருள் முகாமைத்துவத்தை ஊக்குவிப்பதற்காக அரச நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் பிளாஸ்ரிக் சேதனப் பசளை தொட்டிகள், குப்பைகளைத் தரம் பிரிக்கும் தொட்டிகள் என்பவற்றை வழங்குதல்
  • தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கிணறு இறைக்கும் இயந்திரங்களை வழங்குதல்
  • உள்ளூராட்சி நிறுவனங்களுக்குக் கீழுள்ள அனைத்து பொது நூலகங்களுக்கு 15 மில்லியன் பெறுமதியான நூல்களை வழங்குதல்
  • உள்ளூராட்சி நிறுவனங்களுக்குக் கீழுள்ள அனைத்து ஆயுர்வேத நிலையங்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்காக உரிய உபகரணங்களை வழங்குதல்
  • தங்கல்ல நகர சபை, பலபிட்டிய பிரதேச சபை, திக்வெல்ல பிரதேச சபை, போன்றவற்றில் முன்பள்ளிகளை மாதிரி முன்பள்ளிகளாக நவீனமயப்படுத்துதல்
  • அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பிளாஸ்ரிக் நீர்த் தொட்டிகளை வழங்குதல்
  • கட்டிட சிகிச்சை நிலையமொன்றை நடத்துதல்
  • திணைக்களத்திற்காக பிரதி உள்ளூராட்சி ஆணையாளர் பதவியொன்றை அங்கீகரித்துக்கொள்ளுதல்
  • ஐந்தாண்டு மூலோபாய திட்டத்தைத் தயாரித்தல்