காலி மாவட்டத்தில் 7 உள்ளூராட்சி நிறுவனங்களில் கழிவுப் பொருட்களை முகாமைப்படுத்துவதற்காக ரஜ்கம, மொன்ரோவியாவத்த திண்ம கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையம் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தேசிய உதவி கருத்திட்டத்தின் நிதி ஏற்பாடுகள் மற்றும் அதன் மாகாண சபையின் நிதி ஏற்பாடுகள் என்பவற்றின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, ஆரம்பத்தில் 7 உள்ளூராட்சி நிறுவனங்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் தென் மாகாண சபை என்பவற்றிற்காக உள்ளூராட்சி நிறுவனத்துடன் இணைந்து உடன்படிக்கை செய்துகொண்டுள்ளன. உடன்படிக்கையின் பிரகாரம் இந்த நிலையத்தின் நிர்வாகம் தென் மாகாண, உள்ளூராட்சி திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த திண்ம கழிவுப் பொருள் நிலையத்திற்கு குப்பைகளைக் கொண்டு வருகின்ற 7 உள்ளூராட்சி நிறுவனங்கள் ஆரம்பத்தில் இருந்தாலும் தற்பொழுது 5 உள்ளூராட்சி நிறுவனங்கள் குப்பைகளைக் கொண்டு வந்து முகாமைத்துவப்படுத்துகின்றன.

மொன்ரோவியாவத்த திண்ம கழிவுப்பொருள் முகாமைத்துவ நிறுவனத்திற்கு குப்பைகளை வழங்குகின்ற உள்ளூராட்சி நிறுவனங்கள்

  • காலி மாநகர சபை
  • ஹிக்கடுவ நகர சபை
  • ரஜ்கம பிரதேச சபை
  • போப்பே போத்தல பிரதேச சபை
  • பலபிட்டிய பிரதேச சபை

மேற் குறிப்பிட்ட உள்ளூராட்சி நிறுவனங்களிலிருந்து மொன்ரோவியாவத்த திண்ம கழிவுப்பொருள் முகாமைத்துவ நிலையத்திற்கு குப்பைகளை ஏற்றுக்கொள்ளும்போது உக்கிப் போகும் மற்றும் உக்கிப் போகாத குப்பைகள் என்ற வகையில் பிரித்து ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகின்ற குப்பைகள் சேதனப் பசளை உற்பத்தி கூடத்திற்கு அனுப்பப்படுவதோடு உக்கிப் போகாத குப்பைகள் தற்காலிக துப்புரவேற்பாட்டு குப்பை தக்கவைப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றன.

தென் மாகாண, உள்ளூராட்சி திணைக்களம் இந்த நிலையத்தை நிருவகிக்கும்போது திணைக்கள உத்தியோகத்தர்களின் கண்காணிப்பின் கீழ் கீழுள்ள பணியாட் தொகுதியினர் சேவையிலீடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

பதவி எண்ணிக்கை
நிலைய பொறுப்பாளர் 01
வேலை நிருவாகி 01
பாதுகாப்பு உத்தியோகத்தர் 03
நிரந்தர ஊழியர் 10
ஒப்பந்த ஊழியர் 11
தினசரி ஊழியர் 20
மொத்தம் 46

நாளொன்றுக்கு 40 மெட்றிக் தொன் குப்பைகளை முகாமைப்படுத்தும் கொள்ளளவைக் கொண்டுள்ள இந்த நிலையத்தில் உக்கிப் போகும் குப்பைபளிலிருந்து சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படுவதோடு சேதனப் பசளை 1 கிலோ கிராம் 10.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சேதனப் பசளை 1000 கிலோ கிராமுக்கு மேல் கொள்வனவு செய்யும்போது 8.00 ரூபா சலுகை விலைக்கு உள்ளூராட்சி ஆணையாளரின் அங்கீகாரத்தின் கீழ் பசளையை விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக பாடசாலைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், பிரதேச செயலாகங்கள், இலங்கை பொலிஸ், முப்படை உள்ளிட்ட அரசாங்கத்தின் சிறப்பு கருத்திட்டங்களுக்காக விசேட அங்கீகாரத்தின் கீழ் இலவசமாக சேதனப் பசளை வழங்கப்படுகின்றது.