செயல்நோக்கு

பொதுமக்களை மையமாகக் கொண்ட உள்ளூராட்சியில் இலங்கையில் முதன்மையாளராகத் திகழ்தல்.

பணி

பொதுமக்களின் அபிலாஷைகளை திருப்திகரமாக நிறைவேற்றுவதற்கு உரிய வழிகளைக் காட்டுவது மற்றும் நிதி, தொழில்நுட்பம், ஒத்துழைப்பு என்பவற்றை இணைப்பாக்கம் செய்வதன் ஊடாக புத்தாக்க உள்ளூராட்சியொன்றைத் தென் மாகாணத்தில் ஸ்தாபித்தல்.

தென்னிலங்கையின் சிறப்பு, வெற்றி, புராதன வாழ்வு, பரஸ்பர ஒத்துழைப்பு, துணிவு, பரம்பரைத் தன்மை, ஆதிக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் ஆஜானுபாகுவான தன்மை என்பற்றை குறிக்குமுகமாக மானாப் புல்லை ஏந்திய சிங்கமும், பதினையாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுக்கும் உரித்துக் கோருகின்ற மனங்கவரும் வர்ணத்தையும் வடிவத்தையும் கொண்ட ஹீன் போவிட்டியா மலர் தென்னிலங்கையின் பெருமையை சிறப்பாகப் பறைசாற்றுகிறது. துட்டகைமுணு மன்னனின் போருக்கு மாகம் இராஜதானியிலிருந்து புறப்பட்ட போர்ப் படையின் முன்னணியில் ஏந்திச் செல்லப்பட்ட கொடியில் குறிக்கப்பட்ட சிவப்பு நிறமும் சிங்கத்தின் உருவமும் வாழைத் தண்டு நிறமும் கொண்ட தென் மாகாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலாசார ரீதி சமூக ரீதி ஆகிய அனைத்து பிரிவுகள் தொடர்பாக ஆராய்ந்து உருவாக்கப்பட்ட றுகுணு கொடியும் புஷ;பமும் தென்னிலங்கையின் பெருமைமிக்க அடையாளமாகும்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தென் மாகாணத்தின் தலை நகரான காலி யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமை நகராகப் பெயரிடப்பட்டுள்ளது. புராண காலம் தொட்டு வர்த்தக நகரமாகப் பிரபல்யமடைந்திருந்த இந்த நகரம் இந்து சமுத்திரத்தில் அமைந்திருப்பதனால் அதிசிறந்த துறைமுகத்தை உரித்தாக்கிக் கொண்டிருந்தது. மாத்தறை மாவட்டத்தில் மாத்தறை நகரம் பிரதான நிர்வாக நகரமாக இருப்பதோடு அது கொழும்பிலிருந்து 160 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டம் முக்கியமாக சமரேகை மற்றும் வரண்ட காலநிலையைக் கொண்ட வலயமாக இருப்பதோடு கடந்த காலத்தில் றுகுணு நாடு இந்தப் பிரதேசத்தில்தான் இருந்தது.

எமது அமைப்பு ரீதியான நோக்கம்

எமது அமைப்பு மூலோபாயம்

  • மாகாண சபை மூலம் குறித்துரைக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி கொடைகளை வழங்குதல் மற்றும் உறுப்பினர்களுக்கான நிதி ஏற்பாடு
  • நிதி ஆணைக்குழுவின் மூலம் கிடைக்கின்ற பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி கொடை ஏற்பாடுகள் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் தொடர்புபடுதல்.
  • வரிசை அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற அரச நிறுவனங்கள் மற்றும் இணைந்த நிறுவனங்கள் என்பவற்றிலிருந்து கிடைக்கும் நிதி ஏற்பாடுகளை ஈடுபடுத்துதல்.
  • உள்ளூராட்சி நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் நிதி ஏற்பாடுகளுக்கு பொருத்தமான கருத்திட்டங்களை அடையாளம் காணுதல்.
  • உள்ளூராட்சி நிறுவனங்களின் சமூக உற்பத்தி வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுவதற்கு உரிய வசதிகளை வழங்குதல் மற்றும் கருத்திட்டங்களைச் செய்விப்பதற்குத் தூண்டுதல் அளித்தல்.
  • அரச துறை மற்றும் தனியார் துறை என்பவற்றின் பங்கேற்பு சந்தர்ப்பங்களை அடையாளம் காணுதல் மற்றும் சமூக பங்கேற்பு கருத்திட்டங்களுக்காக உள்ளூராட்சி நிறுவனங்களை ஊக்குவித்தல்.
  • உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளுக்கு உள்ளூராட்சி மையத்தின் பணியாட் தொகுதியினரை ஈடுபடுத்துதல்.

எமது கோட்பாடுகள் - எமது விழுமியங்கள்

  • நியாயம் - தீர்மானம் எடுக்கும்போதும் வளங்களைப் பகிர்ந்தளிக்கும்போதும் நியாயமும் நேர்மையும் பாதுகாக்கப்படும் வகையில் செயலாற்றுதல்.
  • வகைப் பொறுப்பு - நடவடிக்கைமுறை மற்றும் செயற்பாடு என்பவை தொடர்பில் அனைத்து வாடிக்கையாளர்களுக்காக பகிரங்கமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயலாற்றுதல். எமது செயற்பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்த விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்குத் தயாhராக இருத்தல், பொதுமக்களுக்கு, அரசுக்கு மற்றும் பணியாட் தொகுதியினருக்கு பொறுப்புக்கூற கட்டுப்பட்டிருத்தல்.
  • தொடர்பாடல் - பங்கேற்கின்ற முக்கியஸ்தர்களுடன் ஒத்துழைப்புடன் செயலாற்றி, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு நவீன தொடர்பாடல் முறைகளுடன் துரிதமாகத் தொடர்பு கொண்டு பயனுறுதி மிக்க வகையில் செயலாற்றுதல்.
  • அர்ப்பணிப்பு - வழிகாட்டுதல் மற்றும் செயல் பயனின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக ஊக்கம் அளித்தல், தேவைக்கு ஏற்ப துரிதமாகத் தமது சேவைகளை வழங்குதல், தினசரி கடமைகளின்போது தமது சேவையை தேவைக்கு ஏற்ப எந்தப் பணியிலும் ஈடுபடக்கூடிய ஆற்றல்.
  • பங்கேற்பு - பங்கேற்கின்ற அனைவருடனும் பயனுறுதி மிக்க தொடர்புகளைக் கட்டியெழுப்பிக் கொள்ளுவதற்காக உரிய அனுசரணை அளித்தல், கடமை சார்ந்த மற்றும் கடமை சாராத நலனோம்பல் பணிகளின்போது தொண்டு அடிப்படையில் தமது சேவைகளை வழங்குதல்.
  • பிரசைகளை மையமாகக் கொண்டிருத்தல் - பொதுமக்களின் பணத்தையும் வளங்களையும் பொதுமக்களின் முதன்மைத் தேவைகள் நிறைவேறக்கூடிய வகையில் பயன்படுத்துதல்.
  • தொழில் திறமை - அனைத்து நடவடிக்கைகளையும் அர்ப்பணிப்புடன், தரமாக மற்றும் அதிசிறந்த முறையில் மேற்கொள்ளுதல்.

நோக்கம், அதிகாரம் மற்றும் செயற்பாடு

உள்ளூராட்சி திணைக்களத்தின் நோக்கங்களை பின்வருமாறு எடுத்துக் காட்ட முடியும்.

  • தென் மாகாணத்தில் உள்ளூராட்சி அதிகார பிரதேசத்தில் பொது உட்கட்டமைப்பு வசதிகளையும் பொது பயன்பாட்டு சேவைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு உரிய நிதி ரீதியான, தொழில்நுட்ப மற்றும் மனித வள ஒத்தழைப்பை வழங்குவதன் ஊடாக மாகாணத்தின் பொது உட்கட்டமைப்பு வசதிகள் முறைமையை மேம்படுத்துதல்.
  • பயிற்சி மற்றும் அபிவிருத்தி மூலோபாயத்தின் ஊடாக உள்ளூராட்சி நிறுவனங்களில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளையும் பணியாட் தொகுதியினரையும் இற்றைப்படுத்தப்பட்ட அறிவு திறன் மற்றும் ஆக்கபூர்வமான மனோபாவங்கள் என்பவற்றைக் கொண்ட வேலை செய்யும் குழுவாக மாற்றுவதன் மூலம் நிறுவனத்தின் உற்பத்தி திறனை உயர்த்துதல்.
  • உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளை கணினி மற்றும் இணையத்தளத்துடன் இணைப்பதன் ஊடாக எமது சேவைகளின் வினைத்திறனையும் உற்பத்தி திறனையும் உயர்த்துதல்.
  • தென் மாகாணத்தில் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்கள் பொது சட்ட ரீதியான சட்டகத்தைப் பின்பற்றுவதற்கு உரிய வழிகளைக் காட்டுவதன் மூலம் வினைத்திறனையும் உற்பத்தி திறனையும் உயர்த்துதல்.
  • தென் மாகாணத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களில் திண்ம கழிவுப் பொருள் முகாமைத்துவ துறையில் சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவதற்கு உதவுவதன் மூலம் முறையான குப்பைகூழ முகாமைத்துவ முறைமை ஒன்றை ஸ்தாபித்தல்.
  • உள்ளூராட்சி நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற சுகாதார மற்றும் துப்புரவேற்பாட்டு சேவைகளுக்கு உரிய வசதிகளை வழங்குவதன் மூலம் தென் மாகாணத்தில் சுகாதார சுட்டிகளை உயர்த்துவதற்கு பங்களிப்புச் செய்தல்.
  • உள்ளூராட்சி நிறுவனங்களில் பொதுமக்கள் சேவைகளைத் தயாரிக்கும் செயற்பாட்டை நிலவும் அரச கொள்கைகளையும் உள்ளூராட்சி சட்ட திட்டங்களையும் இணங்கியொழுகி மேற்கொள்ளுவதன் ஊடாக இலஞ்சம், ஊழல், விரயம் என்பவற்றை ஒழிக்கின்ற வினைத்திறன் மிக்க மற்றும் நம்பிக்கையான அரச சேவையொன்றை தென் மாகாண மக்களுக்கு வழங்குதல்.
  • உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற தவறுகள் (செய்வதால் அல்லது செய்யாததால்) காரணமாக உரிய சட்ட ஆலோசனை சேவை அலகொன்றை நிறுவுவதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல்.
  • மாவட்ட அடிப்படையில் உள்ளூராட்சி நிறுவன அலுவலகங்களுக்கு அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் ஒப்படைப்பதன் ஊடாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு மிக நெருக்கமான அலகாக வலுவூட்டுதல்.

உள்ளூராட்சி திணைக்களத்திற்கு முக்கியமாக 1947ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மாநகர சபை கட்டளைச் சட்டம், 1939ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க நகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டம் என்பவற்றின் மூலம் அதிகாரம் கிடைக்கிறது. அதற்கு மேலதிகமாக 1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபை இடைநேர் விளைவு ஏற்பாடுகள் சட்டத்தின் மூலமும் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்களை பொது நிருவாக செயல்முறைக்குக் கொண்டு வருவதற்காக சட்டங்கள் - ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்;டல்கள் கோப்பைத் தயாரிக்கும் மற்றும் திருத்தும் பணிகள் இடம்பெறுகின்றன. இதன்போது வீதி விளக்குகள்/கடை வாடகை அறவிடல் போன்ற சுமார் 10 பிரிவுகளுக்கு உள்ளூராட்சி ஆணையாளர் சுற்றறிக்கை தயாரித்தல், உள்ளூராட்சி நிறுவன நிதி மற்றும் நிர்வாக ஒழுங்குவிதிகளைத் திருத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு துணைவிதிகளைத் தயாரித்தல் போன்றவற்றை எடுத்துக் காட்ட முடியும்.